வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (13:52 IST)

மது ஒழிப்புப் போராளி நந்தினிக் கைது – நீதிமன்ற அவமதிப்பு

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த தனது தந்தையின் துணையுடன் மதுவிலக்கிற்காக தனியாக போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை நீதிமன்ற அவமதிப்பைக் காரணம் காட்டி சிறையில் அடைத்துள்ளது நீதிமன்றம்.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் அடையாளப் போராட்டங்களை மட்டுமே நடத்தி வரும் நிலையில் தனது தந்தையின் துணையுடன் மதுவிலக்கிற்காக தனியாக போராடி வருபவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. மதுவிலக்கு போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 

2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியதால் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அது சம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணை நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்தினியும், அவரது தந்தையும் நீதிமன்றத்திற்கு மது உணவுப்பொருளா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.அதற்கு மாஜிஸ்திரேட் சாமுண்டீஸ்வரி பிரபா, வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்தும் இருவரும் கேள்விகளைக் கேட்க இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் நந்தினிக்கு திருமனம் நடக்க இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தினி, போராட்டம், திருமணம், குணா ஜோதிபாசு, nandhini, marriage, guna jothibhasu, நந்தினி கைது, நீதிமன்ற அவமதிப்பு

Nandhini arrested for insulting the court