ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (12:40 IST)

அரசியலில் அம்மணமாக நிற்கிறார் டிடிவி தினகரன்: நாஞ்சில் சம்பத்

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிய நிலையில், அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அதிமுகவில் அவர் கேட்டது கிடைக்கவில்லை என்பதாலும், ஓபிஎஸ் எதிர்ப்பின் காரணமாக சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார். 
 
இந்த நிலையில் அமமுகவில் இருந்து ஏற்கனவே விலகி திமுக ஆதரவாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத், தங்க தமிழ்ச்செல்வனின் இணைப்பு குறித்து கருத்து கூறியபோது, 'கொள்கையற்ற அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகியது நல்லது என்றும், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கும் பலம் சேர்ப்பார் என்றும், அரசியலில் அம்மணமாக நிற்கிறார் டிடிவி தினகரன் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 
 
டிடிவி தினகரனை அவர் ஏற்கனவே கடுமையாக தாக்கியிருந்தாலும் இந்த முறை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக யாருமே இல்லை என்பதை குறிப்பிட அரசியல் அம்மணம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது