1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (12:47 IST)

திமுகவில் சேர ஒரு கூட்டமே காத்திருக்கு – தங்க. தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி

திமுகவில் சேர ஒரு கூட்டமே காத்திருக்கு – தங்க. தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த தங்க.தமிழ்செல்வன் “இன்னும் பல அ.ம.மு.க நிர்வாகிகள் தி.மு.கவில் இணைய தயாராக உள்ளனர்” என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அ.ம.மு.கவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஸ்டாலின் தமிழகத்தின் சிறந்த தலைவர். அவரால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும். எனது உழைப்பை கண்டு எனக்கு பதவிகளை ஸ்டாலின் வழங்குவார் என்று நம்புகிறேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் வாக்கினை பின்பற்றுபவர் ஸ்டாலின். பாஜக இயக்குவதால் மானம்கெட்டு மறுபடி அதிமுகவில் இணைய விருப்பமில்லை. அதனால்தான் திமுகவில் இணைந்தேன். நான் மட்டுமல்ல என்னைபோல் இன்னும் பலர் அமமுகவில் இருந்து திமுகவில் இணைய உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.