செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (13:42 IST)

டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி நிதியுதவி

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது  நிவாரண  நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது.

சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன், மிக்ஜாம் புயல் தீவிரத்தால் சென்னையில் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கப்படுள்ளன.
 
சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர், போலீஸார், தன்னார்வலர்கள் மீட்டனர்.
 
தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில்,  முதல்வரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் அளிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
tvs chairman
இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது  நிவாரண  நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினா.ர்
 
 நேற்று ஹோண்டா  நிறுவனம் ரூ. 3 கோடி நிதி வழங்கியது  குறிப்பிடத்தக்கது.