வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:23 IST)

வெள்ளத்தில் பாதித்த வாகனங்களுக்கு இலவச சர்விஸ்! – TVS நிறுவனம் அறிவிப்பு

TVS
சென்னையில் கனமழை வெள்ளம் காரணமாக வலுவான இருசக்கர வாகனங்களுக்கு இலவசமாக பழுது செய்து தரப்படுவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.



வங்க கடலில் உருவான ஜான் விரல் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பலரும் இருசக்கர வாகனத்தையே நம்பி உள்ள நிலையில் மழை வெள்ளத்தில் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இந்நிலையில் இவ்வாறாக பழுதடைந்த வாகனங்களை வேலை கூலி வாங்காமல் பழுது நீக்கி தருவதாக பல மோட்டார் சைக்கிள் நிறுவனமான டிவிஎஸ் அறிவித்துள்ளது.

புயல் காரணமாக சேதமடைந்த வாகனங்களுக்கு பழுது நீக்கி தரும் இந்த சலுகை டிசம்பர் 18 ம் தேதி வரை இருக்கும் என்றும், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள வாகனங்களை சர்வீஸ் செய்வதற்காக மீட்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் யாரும் இஞ்சினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K