1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai formula one car race postponed

சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைப்பு..!

சென்னை
சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் டிசம்பர் 15, 16 தேதிகளில்  ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், எந்த தேதியும் குறிப்பிடாமல்  ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ‘கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி   திமுக அரசு செலவிடுவது ஏன்?  ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்து இருந்தார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நயன்தாரா போல் நாமும் செயல்படுவோம்.. வெள்ள மீட்பு பணியில் இறங்கிய பார்த்திபன்..!