1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தொடர் சரிவால் ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?

சென்னை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் ஐம்பதாயிரம் என்ற நிலைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய்   6,415 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து  ரூபாய் 51,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.50,000ஐ என குறையும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,870 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,960 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் 18 சிறைச்சாலைகளை மூட உத்தரவு? என்ன காரணம்?