1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. youth murder at chennai yesterday night

தூங்கி கொண்டிருந்த இளைஞரை எழுப்பி கொலை செய்த மர்ம நபர்கள்: சென்னையில் பயங்கரம்..!

சென்னை
சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் என்பவர் தனது தாயார் சத்யாவுடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து விட்டு இரவு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்
 
 அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அவரது வீட்டின் கதவை தட்டியது, இதனை அடுத்து விஜயகாந்த் எழுந்து கதவை திறந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த மர்ம கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது 
 
ரத்த வெள்ளத்தில் துடித்த தனது மகனை பார்த்து கதறி அழுத்திய தாய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போதே அவர் இறந்து விட்டதாக தெரிகிறது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் விஜயகாந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி கொலை செய்த மர்ம கும்ப கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு..! சென்னை உயர்நீதிமன்ற முக்கிய உத்தரவு..!!