செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (08:18 IST)

சென்னை என் மனதை வென்றது.. ரோட் ஷோ குறித்து பிரதமர் மோடி..!

நேற்று சென்னையில் பாஜக சார்பில் ரோட் ஷோ நடத்தப்பட்ட நிலையில் இந்த ரோட் ஷோவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சென்னை என் மனதை வென்றது என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொண்ட நிலையில் இரு பக்கத்திலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்ததை பார்த்து அவர் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்

சென்னை என் மனதை வென்றது, இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்று நடைபெற்ற ரோட் ஷோ என்றும் என் மனதில் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும், தேசத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டுள்ளது

மக்களின் இந்த ஆசை எனக்கு வலுவை தரும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம் தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவாக மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva