ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:32 IST)

சாக்கடைக்குள் சொகுசாக படுத்திருக்கும் இளைஞர் ! வைரல் வீடியோ

இது போட்டி உலகம் நாம் சற்று சறுக்கினாலும் நம்மைத் தாண்டி வெற்றிபெற பலபேர் திறமையுடன் போராடிவருகின்றனர். அப்படி இருந்தும் அந்நியன் படத்தில் வருவது போன்று இன்னும் சில இளைஞர்கள் சமூதாயத்தையும் குடும்பத்தையும் ஏழ்மையையும் காரணம் காட்டி வீணே பொழுது போக்கி வருவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில்  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பட்டப்பகலில் மதுகுடித்துவிட்டு, போதையில் தள்ளாடிக்கொண்டே சென்றார். அவர் செல்லும் போது கருப்பாயூரணி என்ற இடத்தில் உள்ள சாக்கடையில் விழுந்தாரா..இல்லை தானாகவே அதற்குள் சென்று படுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நெடுநேரமாகியும் அவர் அந்த சாக்கடையிலேயே சொகுசாக படுத்திருந்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.