டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர்: ரசிகர்களுக்கு த்ரில்
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்த போட்டியில் நேற்று திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. விஜய் 58 ரன்களும் முகுந்த் 32 ரன்களும் மணிபாரதி 21 ரன்கள் எடுத்தனர்
இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு அதே 142 ரன்கள் எடுத்ததால் போட்டி சமமானது. அருண்கார்த்திக் 46 ரன்களும், கெளசிக் 35 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து வெற்றிபெறும் அணியை முடிவு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்ததாலும் அபிஷேக் தன்வர் இரண்டு அபார சிக்ஸர்களை அடித்ததால் 12 ரன்களுக்கு சூப்பர் ஓவரை முடித்துக்கொண்டது. இதனை அடுத்து சூப்பர் ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய திருச்சி அணி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து மதுரை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் தன்வர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டிஎன்பிஎல் போட்டியில் சூப்பர் ஓவர் கொண்ட ஒரு போட்டியாக இந்த போட்டி மாறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது