வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (10:59 IST)

திரும்பி வராத மனைவி : குழந்தைகளுடன் கணவன் தற்கொலை : சென்னையில் அதிர்ச்சி

கருத்து வேறுபாட்டில் பிரிந்து சென்ற மனைவி திரும்ப வராத காரணத்தினால் தனது 2 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை மதுரவாயிலுக்கு அருகில் உள்ள போரூர் காமதேனு நகரில் வசித்து வந்தவர் ஹபிப் ரஹ்மான்(38). இவருக்கு அனிஷா என்ற மனைவியும், நைப்(7), ரியான்(3) என 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடுகாரணமாக அனிஷா சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுவிட்டார்.
 
இந்நிலையில், நேற்று ஹபிப் ரஹ்மானின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஹபிப் மற்றும் அவரின் மகன்கள் இருவரும் படுக்கையில் பிணமாக கிடந்தனர்.
 
பிரிந்து சென்ற மனைவி அனிஷா கடந்த வாரம் சென்னை வந்துள்ளார். ஆனால், அப்போது கூட கணவரையோ, தனது குழந்தைகளையோ பார்க்க அவர் வரவில்லை. மேலும், சரியான வேலை இல்லாததால் பணப்பிரச்சனையிலும் ஹபில் சிக்கியிருந்தார். தனது மகனின் படிப்பு செலவிற்கு கூட பணமில்லாமல் கவர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். எனவே, அனைத்து பிரச்சனைகளினாலும் மன உளைச்சலுக்கு ஆளான ஹபிப் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.