காதலனை ஹீரோவாகக் களமிறக்கும் நம்பர் நடிகை?

nayan
CM| Last Updated: செவ்வாய், 19 ஜூன் 2018 (21:38 IST)
இயக்குநரான தன்னுடைய காதலனை, ஹீரோவாக களமிறக்கி அழகு பார்க்க நினைக்கிறாராம் நம்பர் நடிகை.


கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நின்று தன்னுடைய கொடியை கோடம்பாக்கத்தில் நிலைநாட்டியுள்ளார் பெரிய நம்பர் நடிகை. அவருடைய சொந்த வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையைப் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது. 

இரண்டு தோல்விகளுக்குப் பிறகு தற்போது இயக்குநர் ஒருவரைக் காதலித்து வருகிறார் நடிகை. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்து வருகின்றனர். இயக்குநருக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார்

நடிகை. 
தன் முன்னாள் காதலர்கள் இருவரும் நடிகர்கள் என்பதால், இயக்குநரையும் ஹீரோவாக்கி அழகு பார்க்கத் துடிக்கிறாராம் நடிகை. இயக்கம், நடிப்பு இரண்டுமே தன் காதலன் என்பதால், படத்தைத் தானே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம் நடிகை. தேவைப்பட்டால், ஹீரோயினாகவும் அவரே நடிப்பாராம்.


இதில் மேலும் படிக்கவும் :