திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (19:06 IST)

பிரபல நடிகருடன் டேட்டிங்: மஞ்சிமா மோகன் பதில்!

மலையாள நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அவரே பதில் அளித்துள்ளார். 
 
அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமனார். அதன் பின்னர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடித்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல், தற்போது கவுதம் கார்த்திக் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் இவர் நடிகர் ரிஷியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார், நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்.
 
ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன்.  இதுவரை யாரும் என்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவில்லை. அப்படியே கூறினாலும் எனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை என்று பதிலளித்துள்ளார்.