வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (11:07 IST)

பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டார்:தோசை மாவுக்காக சண்டை

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், மளிகை கடைகாரருடன் நடந்த வாக்குவாதத்தில், ஜெயமோகன் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், வெண்முரசு, போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார். தற்போது கடல், 2.0 உட்பட,  இன்னும் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிவருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மளிகை கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வாங்கிய தோசை மாவு புளித்து போயிருந்ததால் மளிகை கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதத்தின் போது கடைக்காரர், ஜெயமோகனை தாக்கியுள்ளார். கடைக்காரர் தாக்கியதில் ஜெயமோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே ஜெயமோகன், பார்வதிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன், பல எழுத்தாளர்களுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.