திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (16:46 IST)

சினிமா வசனகர்த்தா கிரேஸி மோகன் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசிரியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாமாக, தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.
தமிழ்சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஷி மோகன். இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.
 
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
 
சமீபத்தில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார். அதில் அவரது எழுத்துக்கும் நகைச்சுவை வசனத்துக்கும் ஏராளமான நடிகர்கள் , இயக்குநர்கள் ரசிர்கர்களாக இருக்கின்றனர்.
 
இந்நிலையில் கிரேஷி மோகன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவர் விரைவில்  நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும்,  மக்களும் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது 2 மணி அளவில்  இறந்தார். அவருக்கு வயது 66 ஆகும். கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தில், கிரேஸி மோகனை வசனகர்த்தாவாக சினிமாவில்  அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.