செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (07:43 IST)

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 75

பிரபல தமிழ் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று அவர் நெல்லையில் காலமானார். அவரது உடல் நெல்லை வீரபாகுநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுவார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் 'சாய்வு நாற்காலி' என்ற நாவலை எழுதியதற்காக கடந்த 1997ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி,   அஞ்சுவண்ணன் தெரு மற்றும் குடியேற்றம் ஆகிய 5 புதினங்களையும், அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம், ஒரு குட்டித்தீவின் வரிப்படம், தோப்பில் முகமது மீரான் கதைகள் மற்றும் ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் என 6 சிறுகதைத் தொகுப்புகளை எழுதிய இவர் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார்.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது