செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (08:09 IST)

சித்ரா தற்கொலை: முக்கிய பிரமுகர்களுக்கு வலை? அமைச்சர் ஆதரவு!

சித்ரா தற்கொலையில் சம்மந்தப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தகவல். 
 
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக நசரத் பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிகிறது. 
கணவர் மற்றும் தாய் ஏற்படுத்திய மன உளைச்சலாம் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் மொபைலில் இருந்த கால் ரெக்கார்டுகள், வாட்ஸப் தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனோசு சில அரசியல் முக்கிய புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பிய போது, சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.