1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (09:46 IST)

கண்ட இடத்தில் கையை வைத்தார்: டிஎஸ்பி மீது பெண் எஸ்.ஐ புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின் போது டிஎஸ்பி என்னை கண்ட இடத்தில் கையை வைத்து தள்ளினார் என பெண் எஸ்.ஐ புகார் கூறியுள்ளார்.
 
திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ ஆக பணி புரிந்து வரும் சத்யபாமா குலசை காவல் நிலையத்தில் அதிரடியாக புகார் அளித்துள்ளார்.
 
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கடந்த கடந்த 20-ம் தேதி குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெற்ற போது கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இரவு 11.30 மணிக்கு சென்னை டிஎஸ்பி முத்துக்குமார் 20 பேருடன் கோவிலுக்குள் வந்தார். இதனை நான் தடுத்தேன். கோபமான அவர் கையிலிருந்த விபுதியை என் கண்ணில் தூவிவிட்டு என் நெஞ்சில் கையை வைத்து கீழே தள்ளி விட்டார். மேலும் என்னை ஒருமையில் திட்டிவிட்டார். இதற்கு என்னுடன் பணியில் இருந்த பெண் காவலர்களே சாட்சி என  பரபரப்பான புகாரை கூறியுள்ளார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் டிஎஸ்பி, பெண் எஸ்.ஐ கூறுவது முற்றிலும் பொய் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக அந்த டிஎஸ்பியும் புகார் அளித்திருக்கிறார். இதில் யார் கூறுவது உண்மை என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.