செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (10:53 IST)

பாலியல் புகார்: கேரள முன்னாள் முதல்வர் மீது வழக்குப்பதிவு

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா அளித்த பாலியல் புகாரில் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர் வேணுகோபாலுக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்கள் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார்கள் எனவும் பகிரங்க குற்றசாட்டை வைத்தார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 
 
இந்நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் உம்மன்சாண்டி மீதும் வேணுகோபால் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கிற்கெல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தன் மீது தவறில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் எனவும் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.