திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:23 IST)

ஆசைக்கு இணங்க மறுத்த 13 வயது சிறுமியின் தலையை துண்டித்த டிரைவர்

ஆத்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த 8 ஆம் வகுப்பு மாணவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி(13) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்நிலையில் சுந்தரபுரத்தை சேர்ந்த டிரைவரான கார்த்தி(25) என்பவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். நேற்று சிறுமியின் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்ட கார்த்தி, குடிபோதையில் சிறுமியை கற்பழிக்க முயற்சித்துள்ளான்.
 
அப்போது அங்கு வந்த ராஜலட்சுமியின் தாயார், கார்த்திக்கை கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மனித மிருகம், ராஜலட்சுமியின் தலையை தனியாக துண்டித்து எடுத்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான். 
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் தப்பியோடிய அந்த அயோக்கியனை தேடி வருகின்றனர். தாயின் கண் முன்னே மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.