திருட்டுப்பழி சுமத்தி சிறுமியை நிர்வாணப்படுத்தி சீரழித்த கொடூரர்கள்

girl
Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (11:36 IST)
தஞ்சையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 
தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், செல்போன் திருடிவிட்டதாக திருட்டுப்பழி சுமத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சூடுபோட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். கொடூரத்தின் உச்சமாய் அந்த அயோக்க்கிய கும்பல் சிறுமியை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
இதனையடுத்து சிறுமி அங்கிருந்து தப்பித்து நடந்தவற்றை, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அவரது தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சிறுமியை கொடுமைபடுத்திய அயோக்கியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் பெண் ஒருவரும் சிறுமியை கொடுமைபடுத்தியுள்ளார். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :