அவன தேடி பிடிச்சு அடிக்கனும்: நடிகை சுனைனா ஆவேசம்

sunaina
Last Updated: வியாழன், 25 அக்டோபர் 2018 (16:08 IST)
10 ஆம் வகுப்பு படிக்கும் போது தனக்கு பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ டிரைவரை தேடிப்பிடித்து அடிக்க வேண்டுமென நடிகை சுனைனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 
மீடுவில் பல்வேறு பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். அன்றாடம் பெரும் புள்ளிகள் இந்த மீடுவில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை சுனைனா தாம் பத்தாம் வகுப்பு படித்த போது ஆட்டோ டிரைவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அப்போது இதனை வெளியே சொல்ல தைரியம் இல்லாததால் அமைதியாக இருந்துவிட்டதாகவும் இப்பொழுது அந்த ஆட்டோ டிரைவரை தேடிப் பிடித்து அவன் சட்டையை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என கேட்கனும் போல் இருக்கிறது எனவும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :