ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Last Updated: சனி, 3 ஜூலை 2021 (10:52 IST)

தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் விருதுகள் வழங்க, அந்த விருதுகளை எடுத்துக்கொடுத்த அரசு பெண் அதிகாரிக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :