நடிகைகள் சம்பளம் கேட்பது தவறா? டாப்ஸி விளாசல்!

Last Modified சனி, 3 ஜூலை 2021 (10:03 IST)

சினிமா உலகில் நாயகிகள் நாயகர்களுக்கு அடுத்த இடத்திலேயே வைக்கப்படுகின்றனர்.

எந்த திரையுலகை எடுத்துக்கொண்டாலும் சம்பள விஷயத்தில் அதிகமாக பெறுவது ஆண் நடிகர்களாகதான் இருக்கும். ஏதோ ஒரு விதி விலக்காக சில நடிகைகள் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறுவார்கள். அப்படி சமீபத்தில் நடிகை கரீனா கபூர் சீதா படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக செய்திகள் வெளியாகி பேசு பொருளானது.

இதுபற்றி நடிகை டாப்ஸியிடம் கேள்வி எழுப்பியபோது ‘இப்போது நடிக்கும் நடிகைகளில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அதனால் அவர் சம்பளம் கேட்பது நியாயம்தானே. அவருடைய வேலைக்கான சம்பளத்தைதானே அவர் கேட்கிறார். நடிகர்கள் உயர்த்தும் போது அது பேசு பொருளாவதில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :