கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்களா விஜய் & அஜித்?

Last Modified சனி, 3 ஜூலை 2021 (10:10 IST)

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடிக்கும் பீஸ்ட் மற்றும் வலிமை ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளன.

கொரோனா கால ஊரடங்குகளுக்குப் பிறகு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது சென்னையில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதே போல விரைவில் வலிமை படப்பிடிப்பும் தொடங்க பட உள்ளது. ஆனால் விஜய் மற்றும் அஜித் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :