வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:33 IST)

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

சென்னையில் கத்தி முனையில் பெண் பலாத்காரம்!

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் சிலர் பலாத்காரம் செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறித்து மர்ம நபர்கள் நுழைந்து கொள்ளையடுத்துவிட்டு அவர்களை பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக நடப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்துவரும் மணிப்பூரை சேர்ந்த ஐரின் என்ற நபரும் மர்ம நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று வீட்டில் தனியாக இருந்த ஐரினின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஐரினை கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து மணிப்பூரை சேர்ந்த ஐரின் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை வழக்காக பதிவு செய்த போலீசார் ஐரினை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் ஐரினை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.