வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (09:53 IST)

சேகர் ரெட்டி விவகாரம்: வழக்கை சந்திக்க ஓபிஎஸ் தயார்!

சேகர் ரெட்டி விவகாரம்: வழக்கை சந்திக்க ஓபிஎஸ் தயார்!

சேகர் ரெட்டி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இருக்கிறது, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என எதிர் தரப்பினர் பலமுறை கூறியுள்ளனர். இந்நிலையில் சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் அதனை சந்திக்க தான் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.


 
 
சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத்திடம் ஓபிஎஸ் குறித்து கேள்வி கேட்டபோது, ஓபிஎஸ்-னா யாரு சேகர் ரெட்டியோட நண்பரா என சீண்டினார். மேலும் சேகர் ரெட்டியிடன் கூட்டணி வைத்து ஊழல் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் திருத்தங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றி பேசினார். இந்த கூட்டத்தில் அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு நீதி விசாரணை வேண்டும் என்ற தங்களின் தர்மயுத்தம் தொடரும் என்றார்.
 
மேலும், சேகர் ரெட்டி குறித்து பேசியபோது, சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான கமிட்டி உறுப்பினராக இருந்ததால் அவருடன் புகைப்படம் எடுத்தேன். அது தவறா? என கேட்டார். பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கையில் சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டார் அதனை சந்திக்க தயார் எனவும் கூறினார் ஓபிஎஸ்.