புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:04 IST)

குடோன் பக்கமா போவோம்... படுக்கைக்கு அழைத்த நபரை ஓடவிட்ட பெண்!

திருமணமான நபர் ஒருவன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளான். 
 
கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 
 
ஆனாலும், அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பழக்கடைகாரன் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளான். அந்த ஆணுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என நினைத்தார் அந்த பெண். 
இதனால் அவனுடன் நன்றாக பேசி ஒருநாள் அவன் குடோனுக்கு அழைத்த போது அங்கு சென்று அடித்து உதைத்துள்ளார். அடி தாங்க முடியாத அந்த நபர் தப்பிச் செல்ல எவ்வளவு முயன்றும் விடாமல் அந்த பெண் அடித்து நொறுக்கியுள்ளார். 
 
இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.