1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:23 IST)

பாலியல் தொல்லைக் கொடுத்த நபருக்கு பாடம் புகட்டிய பெண் – வைரல் ஆகும் வீடியோ !

தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த நபர் ஆசை வார்த்தைக் கூறி பெண் ஒருவர் அழைத்து அடித்து வெளுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கிடங்கு வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் திருமணம் நிச்சயமானப் பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாத அந்தப் பெண் அவருக்குப் பாடம் புகட்ட சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தார்..

இந்நிலையில் சாலையில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் சைகை செய்த அந்த நபரை அந்த பெண் ஆசை வார்த்தைக் கூறி கொடவுனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் பின்னால் ஆசையாக சென்ற அந்த நபரை அடி வெளுத்து வாங்கியுள்ளார். இதனை செல்போன் வீடியோவாகவும் எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் அவர் கத்த ‘அமைதியா என்கிட்ட அடு வாங்குறியா இல்ல போலிஸ்கிட்ட அடிவாங்குறியா ?’ எனத் திட்டி வெளுத்து வாங்கியுள்ளார். வலிப் பொறுக்க முடியாமல் அந்த நபர் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது.