வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (13:26 IST)

ஆணா? பெண்ணா? என்ன குழந்தை பிறக்கும்.. வீடியோ வெளியிட்ட எமி ஜாக்‌சன்!!

தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்துக்கொண்ட எமி ஜாக்சன் அதை பார்ட்டி வைத்து தெரிவித்துள்ளார். 
 
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து தாண்டவம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். 
 
அதன் பின்னர் எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலரை திருமணம் செய்ய முடிவு எடுத்து நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டார். அதோடு கர்ப்பமாக இருக்கும் எமி சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
அந்த வகையில் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பார்ட்டி ஒன்றில் அதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 
 
இதோ இந்த வீடியோ...