திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:52 IST)

ஓரினச்சேர்க்கைக் காதலை வெளியில் சொன்ன நண்பன் – விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்களின் ஓரினச்சேர்க்கை காதல் பற்றி வெளியே சொல்லி தன்னை அவமானப்படுத்தியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் மாவட்டத்தைச் சேர்ந்த ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவரும் கட்டிடத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் ஓரினச்சேர்க்கைக் காதலாக மாறியுள்ளது.

யாருக்கும் தெரியாமல் இவர்கள் இருவரும் காதலர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகேஷ், மணிகண்டனின் தோழர்களிடம் தங்கள் காதலைப் சொல்லியுள்ளார். இதனால் மணிகண்டன் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதனால் மகேஷின் மேல் கோபம் கொண்ட மணிகண்டன் வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ’மகேஷ, என்னைப் பலமுறை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, என் நண்பர்களிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டான். இதனால் பலரும் என்னைப் பற்றி அசிங்கமாகப் பார்க்கின்றனர்.  என் தற்கொலைக்கு மகேஷ்தான் காரணம். நான் இறந்த பின் வந்து அவனைப் பேயாக பழிவாங்குவேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகனாக வந்து பிறப்பேன். ’ எனக் கூறியுள்ளார்.

இதன் பின் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா எனத் தெரியவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த ஆதாரத்தை வைத்து ராஜாக்க மங்கலம் போலிஸார், தற்கொலைக்குத் தூண்டியதாக மகேஷை கைது செய்துள்ளனர்.