திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (22:47 IST)

நடிகர் ரஜினி வீட்டுக்கு முன் உதவி கேட்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள்

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னையில் பெய்த மழையினால் வீடுகளை இழந்துவிட்டதால் தங்களுக்கு உதவ வேண்டுமெனக்கூறி நடிகர் ரஜினியின் வீட்டுக்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து உட்கார்ந்துள்ளனர்.
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.