வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (21:39 IST)

பேருந்துகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி – தமிழக அரசு

கடந்த மார்ச் மாதம்  இந்தியாவில் அதிகளவில் பெருந்தொற்றுப் பரவலானதை அடுத்து, அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் தற்போதுவரை அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளுடன்  ஊரடங்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநிலப் போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் நாளைமுதல் 100% இருக்கைகளில் பயணிகளை அழைத்துச் செல்லலாம் என அரசு தற்போது அறிவித்துள்ளது.