1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Sees No Change Today Amid Recent Fluctuations

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த மாதம் 28ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8935 என விற்பனையானது. அந்த நிலையில், ஒரே வாரத்தில் ஒரு கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.200 வரை உயர்ந்துள்ளது. இதனால், ஒவ்வொரு சவரனுக்கும் ரூ.1600 வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,130
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,130
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,040
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,960
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,960
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,680
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   79,680
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.114.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.114,000.00
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!