ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (22:34 IST)

அமலாபால் புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில் தொழிலதிபர் கைது

பிரபல நடிகை அமலாபால் இன்று சென்னை காவல்துறையில் தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது புகார் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அமலாபால் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி துரித நடவடிக்கைக்கு அமலாபால் தரப்பினர் நன்றி கூறியுள்ளனர்.

தன்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் குறித்து அமலாபால் கூறியபோது, 'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றால் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று ஆவேசமாக கூறினார்.

பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்ட நடிகை அமலாபால் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.