வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (12:34 IST)

டிஆர்பி(TRP) க்காக பிரபல நடிகையை ஏமாற்றிய விஜய் டிவி

டிஆர்பி(TRP) க்காக விஜய் டிவி தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை பார்வதி மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டே வருகிறது. மேலும் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பேட்டிகள் என அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்காகவே ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலமடைந்தது. அதே வேலையில் டிஆர்பி க்காக விஜய் டிவி செய்யும் வேலை பார்ப்பவர்களது முகங்களை சுழிக்க வைக்கும் விதமாக உள்ளது.
 
இந்நிலையில் விஜய் டிவி யின் டிஆர்பி ஐ ஏற்றும் முக்கிய நிகழ்ச்சியான கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நிகழ்ச்சி சமூக அவலங்களைப் பற்றி பேசும் ஒரு நிகழ்ச்சியாகும்.  உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர், நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவருடன் இயக்குனர் கரு. பழனியப்பனும் கலந்துகொண்டார். ஒருவரது பெயருக்கு பின்பாக அவரவர் ஜாதிப் பெயரை வைப்பது சரியா தவறா என்பதே அன்றைய நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு. பெயரை பெயராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பார்வதி. 
 நான் பேசியதையும், பழனியப்பன் அவர்கள் பேசியதையும்  விஜய்டிவி TRPக்காக மோசமாக எடிட் செய்து எனக்கு துரோகம் செய்து விட்டனர் என்று பார்வதி நாயர் தற்பொழுது கூறியுள்ளார்.