திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜனவரி 2018 (20:05 IST)

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: காவல் நிலையத்தில் பகீர் புகார்!

பிரபல தமிழ் முன்னணி நடிகை அமலாபாலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரே புகார் கூறியுள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
நடிகை அமலாபால் பிரபல இயக்குனர் ஏல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் கருத்துவேறுபாடு காரணமாக தனது காதல் கணவர் இயக்குனர் ஏஎல் விஜயை விவாகரத்து செய்தார்.
 
விவாகரத்துக்கு பின்னர் தனியாக வசித்து வரும் அமலாபால் மீண்டும் படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவர் சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரில், நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார் அமலாபால். பிரபல நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.