1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Withdrawal from the OPS team.! OPS not going in the right direction..! Pugajendi Sadal..!!

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல்.! சரியான திசையில் செல்லாத ஓபிஎஸ்..! புகழேந்தி சாடல்..!!

Pugazanthi
ஒ.பன்னீர்செல்வம் பயணிக்கும் திசை சரியானதாக இல்லை என்றும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
 
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது பேசிய ஜே.சி.டி.பிரபாகர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வில் இருந்து இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடங்க உள்ளேன் எனத் அவர் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய புகழேந்தி ஒ.பன்னீர்செல்வத்திற்கும், தங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார். ஒ.பன்னீர்செல்வம் பயணிக்கும் திசை சரியானதாக இல்லை என்று அவர் புகார் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அதன் காரணமாகவே அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் புகழேந்தி குறிப்பிட்டார்.

 
பின்னர் பேசிய கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணிகளில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு ஈடுபடும் என்றார். மற்றொரு தோல்வியை தாங்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுருக்கு தங்க மோதிரம்… திராவிடர் கழகம் அறிவிப்பு!