திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (14:27 IST)

செல்வப்பெருந்தகை வாயை மூடாவிட்டால் வேற மாதிரி ஆகிரும்: எச்.ராஜா எச்சரிக்கை

H Raja
செல்வப்பெருந்தகை  வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றும் இல்லாவிட்டால் வேற மாதிரி ஆகிவிடும் என்றும் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் அகில இந்திய அளவில் அந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளதை அடுத்து  நாளை மாலை பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அனைத்துமே பாமகவின் வாக்குகள் என்றும் பாஜகவுக்கு என குறிப்பிட சதவீதம் ஓட்டு இல்லை என்றும் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள எச் ராஜா தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் இதுவரை எத்தனை கட்சிகளில் இருந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் அவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்றும் செல்வப்பெருந்தகை வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவருக்கு நல்லது, இல்லையென்றால் அவருடைய பின்புலங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச் ராஜாவின் இந்த எச்சரிக்கைக்கு செல்வப்பெருந்தகை என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran