செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (08:28 IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா? மழுப்பலான பதில் சொல்லி எஸ்கேப்!

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா? மழுப்பலான பதில் சொல்லி எஸ்கேப்!
ஆட்சி அமைக்கவுள்ள திமுக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள திமுக மே 7 ஆம் தேதி முதல் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினோடு இணைந்து அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் அமைச்சரவையில் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது ‘இன்னும் 4 நாட்களில் தெரிந்துவிடும்’ எனக் கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.