செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 நவம்பர் 2024 (15:28 IST)

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

premalatha vijaynakanth
திமுக கூட்டணி 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்குமா என எனக்கு தெரியாது என்றும். ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றும். எங்கள் கூட்டணி 2026 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறும் என்றும், 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக விஜய் புதிய கட்சி ஆரம்பித்து மாநில மாநாட்டை நடத்திய உடன், பல கட்சிகள் பரபரப்பில் இருக்கின்றதா என்பதை பார்த்து வருகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கட்டுக்கோப்பாக தங்களது கூட்டணியை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அந்த கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு இருப்பதாகவும். ஒரு சில கட்சிகள் விஜய் கூட்டணியில் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம் என்பதை உறுதி செய்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா , 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும் என்று தெரிவித்தார். திமுக கூட்டணி 2026 வரை நீடிக்குமா என எனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva