1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (12:48 IST)

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்கப்படுமா..? நாளை விசாரணை..!!

Vaiko
பம்பரம் சின்னம் வழங்க கோரி மதிமுக தொடர்ந்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட கோரி வைகோ தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

மக்களவைத் தேர்தலில்  பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி  மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,  வேட்புமனு தாக்கல் செய்ய மூன்று தினங்களே உள்ள நிலையில் இன்னும் தங்கள் மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவிலை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் முரளி முறையீடு செய்தார். 

 
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட  தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.