வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (16:00 IST)

மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடப் போவது யார்.? இவர்தான் வேட்பாளரா.? வைகோ அறிவிப்பு..!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
 
இதனிடையே சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் பொது சின்னத்தில் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.
 
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் சட்ட சிக்கல் என்பதால் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்தார்.