ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (08:38 IST)

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் விஷம் குடித்த மதிமுக பிரமுகர்: வைகோ அதிர்ச்சி..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மதிமுக பிரமுகர் விஷம் குடித்துவிட்டதாக கூறப்படுவதை அடுத்து வைகோ அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.

பாராளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றில் துரை வைகோவும் இன்னொரு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் திமுக ஒரு தொகுதி மட்டுமே தருவதாக கூறியிருந்த நிலையில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரை வைகோ ஒரு மனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கணேசன் மூர்த்தி அதிருப்தியில் இருந்ததாகவும் திடீரென அவர் விஷம் குடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை நேரில் பார்த்த வைகோ, கணேசமூர்த்தி உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் அவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல தொகுதி கொடுக்கலாம் என்று எண்ணி இருந்தேன் அதற்குள் அவர் இப்படி விஷம் குடித்து விட்டதாகவும் அதிர்ச்சி உடன் தெரிவித்திருந்தார்.

அண்ணா காலத்திலிருந்து எம்எல்ஏ, எம்பி என வரிசையாக பதவியில் இருந்த கணேசமூர்த்தி தற்போது திடீரென தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் மனம் உடைந்து விஷம் குடித்து விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva