1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (08:11 IST)

தேர்தலுக்கு ஆதாயமாக ஆல் பாஸ் வியூகத்தை கட்டம் கட்டுமா அரசு??

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 

 
தனது சமீபத்திய பேட்டியில் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92% மாணவர்கள் வருகின்றனர். 
 
மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி, பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர வாரம் 6 நாட்களுக்கு பள்ளிகள் நடைபெறும். 
 
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும். 10, 12 ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.