1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (17:20 IST)

அண்டை மாநிலத்தில் 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உறுதி: அட்டவணை வெளியீடு!

அண்டை மாநிலத்தில் 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உறுதி
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை என்பதும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டிலும் இன்னும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் பொதுத்தேர்வு இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 10, 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்று உறுதி செய்யப் பட்டது 
 
இதனையடுத்து இந்த தேர்வின் அட்டவணை கேரள மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralapareekshabhavan.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரளாவைப் போலவே தமிழகத்திலும் 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்