10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது? பரபரப்பு தகவல்!

exam
10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது?
siva| Last Updated: திங்கள், 16 நவம்பர் 2020 (13:28 IST)
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த உறுதியான தகவலும் இல்லை. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 10, 12ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை தமிழக அரசிடம் தமிழக அரசு தேர்வுத்துறை சமர்ப்பித்து உள்ளதாகவும் சட்டப்பேரவை சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் 10, 11 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன


இதில் மேலும் படிக்கவும் :