வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (11:02 IST)

மாம்பலம் சாலையில் திடீர் பள்ளம்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை மாம்பலம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நாள்தோறும் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அவ்வபோது சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக மழை காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி கொள்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று மாம்பலம் பிருந்தாவன் தெரு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தி நகர் – மாம்பலம் இடையே பயணிக்கும் முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழி போக்குவரத்து நெரிசலாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் காலையிலேயே பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.