1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (09:14 IST)

மீண்டும் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்! – நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட யூட்யூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல யூட்யூபராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருபவர் மதுரையை சேர்ந்த மாரிதாஸ். சமீபத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டதாக மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிய உரிய முகாந்திரம் இல்லை என வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மாரிதாஸ் மீண்டும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காதர் மீரான் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 வழக்குகள் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.